டாக்டர் டேவிட் குடால் : நாளை இறப்பார்.

Report
10Shares

டாக்டர் டேவிட் குடால்(David Goodall) இன்று இருப்பார்.நாளை இறப்பார்.

நாளை மதியம் அவர் கதை முடியும் நேரம் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஆனால்,”நாளை எந்த நேரமானாலும் எனக்குப் பிரச்சனை இல்லை ,எந்த நேரத்திலும் இறக்கத்தயாராக உள்ளேன் “என்கிறார்.

இன்று உலகளாவிய பத்திரிகையாளர்களைப் பார்த்து அவர் ஆச்சரியப்பட்டார்.“எனது விடயத்தில் நீங்கள் காட்டும் அக்கறைஎன்னை மகிழ்ச்சிப்படுத்துகிறது”என்றவர்.“இன்னும் சில விடயங்கள்,நான் செய்ய இருக்கிறது,ஆனால்,அவற்றுக்குக் காலம்கடந்து விட்டது” என்றார்.அவுஸ்திரேலியாவின் கிராமப் புறப் பிரதேசங்களைக் இழக்கிறேன்,சுவிஸ் மக்களின் விருந்தோம்பல் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது,எனது கதை நான் வாழ்ந்த அவுஸ்ரேலியாவில் முடிந்திருந்தால் நான் மேலும்,மகிழ்ச்சியடைந்திருப்பேன்”என்கிறார்50,60 வயதைத் தாண்டியவர்களுக்கு அவர்களின் வாழ்வின் முடிவைத் அவர்களே தீர்மானிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும்”என்கின்ற இந்த இயற்கை,சுற்றுச்சூழல் ,தாவரவியலில் விஞ்ஞானியான டாக்டர் குடால்,தனது 102 வயது வரை பல்கலைக்கழகத்தில் பணியாற்றுங்காலத்தில் தனது முடிவைத் தானே தொடவேண்டும் என்பதில் உடன்பட்டிருக்க மாட்டார்.ஆனால்,தனது 103 வயதில் படுக்கையிலிருந்து தவறி விழுந்தவர்,உதவி கிடைக்காமல் இரண்டு நாட்கள் தரையிலேயே கிடந்துள்ளார்.துப்பரவுப் பணியாளரால் கண்டுபிடிக்கப்பட்டு வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டார்.தனித்து இயங்க முடியா நிலையில் குடால் உலகின் பாதித் தூரம் பயணம் செய்து மரண உதவிக்காகச் சுவிற்சர்லாந்திற்கு வருகை தந்துள்ளார்.பொதுவாக மரண உதவி எப்படி வழங்கப்படுகிறது?வாந்தித் தவிர்ப்பு மாத்திரைகள் வழங்கப்படும்.மரண மருந்தை அவர் உட்கொள்வார்.30 செக்கன்களில் தூக்கமாகிவிடுவார்.நான்கு நிமிடங்களுக்கு இதய ஓசை இருக்கும்.அவர்அமைதியாக இந்த உலகப்பயணத்தை முடித்துக்கொள்வார்.இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒளிப்பதிவு செய்யப்படும்.இவை முடிந்ததும் மாநிலச் சட்ட அதிகாரி,சட்ட வைத்திய அதிகாரி,பொலிஸார்ஆகியோரால் மரணம் உறுதிப்படுத்தப்படும்.அவரின் சாம்பல் உறவுகளுக்கு அனுப்பப்படும்.டாக்கர் டேவிட் குடாலின் வாழ்க்கை ஒருபடிப்பினையாகவும்,ஆச்சரியமூட்டுவதாகவும்இந்த மனிதகுலத்திற்கு அமைந்துள்ளது.ஒரு கல்வியாளர் இந்த உலகுக்கு உதாரணமாக வாழ்ந்து மறையப் போகிறார்.குடால் ஒரு கவிஞர் என்றும் அறிகிறோம்.உங்களுக்கு!டாக்டர் குடால்!நாளை உங்கள் செய்தி வரும்.நீங்கள் மறைந்ததாகப் படிப்போம்.உங்கள் மரணம் எங்களைத் தாக்கும்.நெஞ்சுக்குள் ஒரு தீ எரியும்.எங்கள் மூளைக்குள்வாழ்வு பற்றியும்,மரணம் பற்றியும்கேள்வி மீண்டும் எழும்.நீங்கள் செல்லுங்கள்,அங்கே உங்கள் நண்பர்கள் காத்திருப்பர்!நாளை ஏதோ ஒரு வடிவில் நாமும் வருவோம்.எமக்காகக் காத்திருங்கள்.நீங்கள் இயற்கையை வென்றவர்.உயிர் துறக்க அஞ்சாதவர்.அதனால்,மாமனிதர்.

368 total views