ஹட்டாரை தீவாக மாற்றி எல்லையில் கழிவுகளை கொட்ட சவுதி திட்டம்!

Report
10Shares

ஹட்டார் எல்லையில் கால்வாய் வெட்டி அதில் அணு ஆயுத கழிவுகளை கொட்டுவதற்கு சவுதி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹட்டார் தீவிர வாத அமைப்புக்களுக்கு உதவி புரிவதாகவும், ஈரானுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்த குற்றச்சாட்டை அண்டை நாடுகள் வைத்துள்ள நிலையில், இதனை ஹட்டார் மறுத்துள்ளது.

இந்நிலையில் சவுதி அரேபியா நாளிதழ் ஒன்றில் வெளியாகன செய்தியில், ஹட்டாரின் ஒரு பக்க எல்லையில் இராணுவ முகாம் அமைக்கவுள்ளதாகவும், மறு பக்கம் அணு உலைகளின் கழிவுகளை கொட்ட சவுதி அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹட்டாரின் எல்லையில் கால்வாய் வெட்டினால், ஹட்டார் தீவாக மாறும் அபாயமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

933 total views