ஆற்றின் கரையில் கூடிய காதலர்களை தடியால் மிரட்டி விரட்டிய பஜ்ரங்தள்!

Report
5Shares

அஹமதாபாத்தில் சபர்மதி ஆற்றின் கரையோரம் இன்று கூடி இருந்த காதலர்களை பஜ்ரங்தள் அமைப்பினர் தடியைக் கொண்டு மிரட்டி விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சட்டத்தை தங்களது கையில் எடுத்துக் கொண்டு நாடு முழுவதும் பஜ்ரங்தள் மற்றும் இந்து அமைப்பினர் இவர்களை விரட்டி அடித்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றின் முகப்பில் கூடியிருந்த காதலர்களை பஜ்ரங்தள் அமைப்பினர் தடிகளைக் கொண்டு விரட்டினர். இதனால், காதலர்கள் அந்த இடத்தில் இருந்து உயிருக்கு அஞ்சி ஓடினர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒரு அங்கம்தான் பஜ்ரங்தள். பின்னர் இவர்களை போலீசார் கைது செய்தனர். ஹைதராபாத்திலும் இதேபோல் காதலர்களுக்கு எதிராக பஜ்ரங்தள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்

1074 total views