தென்னாப்பிரிக்கா ஜனாதிபதி நீக்கம்?

Report
2Shares

ஏற்கனவே கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா (Jacob Zuma) மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், தற்போது அவரை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க அவரது கட்சியான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென்னாப்பிரிக்க ஜனாதிபதியாக கடந்த 2009-ம் ஆண்டு முதல் ஜேக்கப் பதவி வகித்து வருகின்ற நிலையில் அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

ஜேக்கப் ஜுமாவை நாட்டின் ஜனாதிபதியாக பதவி நீக்கம் செய்ய ஆளும் கட்சி முடிவு செய்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.

ஆபிரிக்க தேசிய காங்கிரசின் (ANC) தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக கடந்த 13 மணி நேரமாக ஜனாதிபதியுடன் பேச்சு வார்ததை நடைபெறுவதாகவும்,இதன் காரணமாக பதட்டமான சூழல் நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கட்சி தேர்தலில் நடைபெற்ற குழறுபடி மற்றும் பிளவு காரணமாக கட்சிக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜுமாவுக்கு எதிராக அவரது முன்னாள் மனைவி ராமபோசா களமிறங்கினார். அதில் வெற்றிபெற்ற அவர், தற்போது கட்சி தலைவராக இருந்து வருகிறார். இவர் முன்னாள், தொழிற்சங்க தலைவரும், பெண்ணியவாதியுமாவார்.

இதன் காரணமாக ஜுமாவை அகற்ற கட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து ஜுமாவை ராஜினாமா செய்ய 48 மணி நேரம் கொடுத்திருப்பதாகவும, இதுகுறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

இதன் காரணமாக தென்னாப்பிரிக்காவில் பதற்றம் நிலவி வருகிறது.

தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜுமாவின் 9 ஆண்டுகால ஆட்சி காலத்தில், நாட்டின் பொருளாதாரம் சிக்கலான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும்,, வங்கிகளும் சுரங்க நிறுவனங்களும் முதலீட்டாளர்களின் நிச்சயமற்ற தன்மை உருவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவை அனைத்துக்கும் , ஊழல் காரணம் என்றும் இதன் காரணமாக நாட்டில் முதலீடுகள் வர தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

961 total views