8 வயது சிறுவனை நிர்வாணமாக மரத்தில் கட்டி வைத்த தாய்

Report
9Shares

மும்பையில் 8 வயது சிறுவன் ஒருவன் மரத்தில் நிர்வாண நிலையில் கட்டி வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகைப்படம் ஒன்று டுவிட்டரில் வெளிவந்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்த மும்பை போலீசார், அந்த சிறுவனை மீட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது, அந்த சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் அடம்பிடித்ததால் அதற்கு தண்டனையாக அந்த சிறுவனின் தாய் மற்றும் சகோதரர் மரத்தில் கட்டி வைத்ததாக தெரிகிறது.

ஆனால் இதுகுறித்த புகார் எதுவும் பதிவு செய்யப்படாததால் போலீசார், சிறுவனின் தாய் மற்றும் சகோதரரை எச்சரிக்கை மட்டும் செய்துவிட்டு திரும்பிவிட்டனர்.

1097 total views