8 வயது சிறுமி பலாத்காரம் : கண்டித்து பாகிஸ்தானில்பெரும் கலவரம்

Report
1Shares

பாகிஸ்தானில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் இதனை கண்டித்து அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் அருகே கசூர் என்ற பகுதியில் ஜைனாப்,8 என்ற 8 வயது சிறுமி கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போனார். பெற்றோர் பல இடங்களிலும் தேடினர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ததில் அச்சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டது தெரியவந்தது.

தகவலறிந்த கசூர் வாசிகள் மருத்துவமனை முன் தர்ணா செய்தனர். இதையடுத்து அங்கு பெரும் வன்முறை வெடித்தது. வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன.

206 total views