ஜொனி ஹொலிடேயின் சிற்றுந்து ஏலத்தில்

Report
2Shares

அண்மையில் மறைந்த, பிரபல பாடகர் ஜொனி ஹொலிடேயின் சிற்றுந்து ஏலத்தில் விடப்பட உள்ளது. எதிர்வரும் 7ம் திகதி பரிஸ் எட்டிலுள்ள Sotheby’s ஏல மையத்தில் இந்தச் சிற்றுந்து ஏலம் விடப்பட உள்ளது.

இந்த பந்தயச் சிற்றுந்து பாடகரால் 1965 ஆம் ஆண்டு வாங்கப்பட்டதாகும். 300 குதிரை வலு கொண்ட Iso Grifo A3/C ரகப் பந்தயச் சிற்றுந்துதான் (voitures de sport) பாடகரால் வாங்கப்பட்ட முதற் சிற்றுந்தாகும்.

இந்தச் சிற்றுந்தின் பெறுமதியானது மூன்று மில்லியன் யூரோக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளமை அதிர்ச்சிக்குரிய விடயமாகும். ஆரம்ப விலையே மூன்று மில்லியன் என்றால், இது விற்கப்பட்டப் போகும் விலை இன்னமும் தலை சுற்றிவிடும்.

989 total views