டாவோஸ் மாநாடு: மோடி- டிரம்ப் சந்திக்க வாய்ப்பு

Report
1Shares

டாவோசில் நடக்க உள்ள உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் சந்தித்து பேசும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர மாநாடு சுவிட்சர்லாந்தின் டாவேசில் இம்மாத இறுதியில் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கின்றார்

இந்நிலையில் அமெரிக்க அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளர் சாரா சான்டர்ஸ் கூறுகையில், டாவோசில் நடக்க உள்ள உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில் பிரதமர் மோடியும், அதிபர் டிரம்ப்பும் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது. கடந்த 18 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க அதிபர் ஒருவர் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

843 total views