மது பாட்டில்களை திருடி குடித்த அரிய மிருகம்.

Report
4Shares

அமெரிக்காவில் ‘ஒப்பசம்‘ என்ற அரிய மிருகம் காணப்படுகிறது. இது மரங்களில் வாழ்கிறது. அணிலும், எலியும் சேர்ந்த கலவையாக இது உள்ளது.

இது குறும்பு தனம் மிக்கது. மனிதர்களையும் கடித்து தாக்குகிறது. இந்த நிலையில் நேற்று இது நியூயார்க் நகரின் முக்கிய மதுக்கடை ஒன்றில் புகுந்தது.

கடை மூடப்பட்ட பின் முழு பாட்டில் மதுவையும் குடித்தது. போதை தலைக் கேறியதும் ரகளையில் ஈடுபட்ட அந்த மிருகம் பாட்டில்களை உடைத்து மதுக்கடையை சூறையாடியது. ஏற்கனவே இது போன்ற பிரச்சினையில் சிக்கியுள்ளது.

தற்போது இந்த விலங்கை பிடித்து சிறிய கூண்டில் அடைத்து வைத்துள்ளனர். அதன் காரணமாக அது வைரல் மூலம் அமெரிக்க மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளது.

இதுகுறித்து பலர் தங்களது கருத்துக்களை சுவாரசியமாகவும், கிண்டலாகவும் பதிவு செய்துள்ளனர். அந்த மிருகம் எப்படி பாட்டிலை திறந்து இருக்கும்? என ஒருவர் சந்தேகம் கிளப்பியுள்ளார். மற்றொரு நபரோ, இங்கு நடக்கும் அரசியல் பிரச்சினை தாங்காமல் நொந்து போய் மது குடித்து இருக்கிறது என கேலி- கிண்டல் செய்துள்ளார்.

711 total views