ஜெருசலேம் பிரச்சனை குறித்து உடனடியாக ஐ.நா.வில் விவாதம் நடத்த வேண்டும்- உலக நாடுகள் கோரிக்கை

Report
2Shares

கடந்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக கடந்த வாரம் செய்திகள் வெளியானது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வந்தன. சீனாவும் அமெரிக்காவின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜெருசலேமை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்கள் சொந்தம் கொண்டாடி வரும் நிலையில் ஜெருசலேம் நகரை தலைநகராக அறிவிப்பது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் நேருக்குநேர் அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி அதன் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஐ.நா. சபை அறிவுரை கூறியிருந்தது.

இதற்கிடையே, இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை மாற்றுவதற்கு அமெரிக்கா அங்கீகரித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் டெல்அவிவ்-ல் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமிற்கு மாற்றவும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

650 total views