சிரியாவில் ஐஎஸ்ஸை தோற்கடிப்பதே நோக்கம்

Report
5Shares

சிரியாவில் ஐஎஸ்ஸை தோற்கடிப்பதே எங்களது நோக்கம் என்று ரஷ்யாவும், அமெரிக்காவும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து ரஷ்ய அரசு இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கையில், “சிரிய பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது. சிரியாவில் ஐஎஸ்ஸை தோற்கடிப்பதே எங்களது நோக்கம். அதற்கு இணைந்து செயல்படுவோம்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அமைதி பேச்சுவார்த்தையின் மூலம் சிரியா பிரச்சினைக்கு தீர்வுக் காண இரு நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன. இதற்காக ஜெனிவாவில் நடைபெறவுள்ள அமைதி பேச்சுவார்த்தையை இரு நாடுகளும் எதிர்நோக்கி உள்ளன.

சிரியாவில் ஐஎஸ்ஸை அழிப்பதற்காக அமெரிக்கா ஒருபுறமும், சிரிய அரசுடன் இணைந்து ரஷ்யாவும் போரிட்டு வருகின்றன. இதில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இது உலக நாடுகளுக்கிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

348 total views