லெபனானுக்கு எதிராக சவுதி யுத்தப் பிரகடனம்?

Report
12Shares

லெபனானுக்கு எதிராக சவுதி அரேபியா யுத்தப் பிரகடனம் செய்திருப்பதாக, லெபனானின் தீவிரவாதக் குழுவான ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸரல்லா தெரிவித்துள்ளார்.

சவுதிக்கு விஜயம் செய்திருந்த லெபனான் பிரதமர் சாத் ஹரீரி ரியாத்தில் வைத்து, லெபனானில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அதனால் பிரதமர் பதவியில் இருந்து தாம் விலகுவதாகவும் அறிவித்திருந்தார்.

இது பற்றிக் குறிப்பிட்ட ஹஸன் நஸரல்லா, ஹரீரியை வைத்து தமது இயக்கத்துக்கு எதிரான நடவடிக்கையில் இறங்குவதற்கு சவுதி முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

எவ்வாறெனினும், ஹரீரியின் பதவி விலகலைத் தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என லெபனான் ஜனாதிபதி மிச்சேல் அவுன் தெரிவித்துள்ளார்.

495 total views