மொரகஹஹேன பிரதேசத்தில் ஒன்றரை கிலோ ஹெரோய்ன்

Report
1Shares

ஹொரணை, மொரகஹஹேன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து ஒன்றரை கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோய்ன் போதைப் பொருள் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி அவரின் வீட்டிலிருந்து சுமார் 01 கிலோ 767 கிராமும் 720 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 04ம் திகதி ஹொரணை பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரை ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்த பின்னர் 07 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி பொலிஸ் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் சந்தேகநபரின் வீட்டில் நடத்திய சோதனையின் போது இரும்பு பெட்டி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோய்ன் போதைப் பொருளும் 493.63 கிராம் நிறையுடைய தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

316 total views