திருகோணமலையில் கிணற்றில் யுவதியின் சடலம் மீட்பு!!

Report
5Shares

திருகோணமலை - கன்னியா பகுதியிலுள்ள கிணறொன்றிலிருந்து யுவதியொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் அதே பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடையவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

244 total views