வடக்கு ­மா­காண சபை­யின் அனு­ம­தியைப் பெற்று செயற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டும் !!

Report
2Shares

மகா­வலி அபி­வி­ருத்தி அதி­கார சபை­யின் வட­க்கு மா­காண செயற்­பா­டு­கள் 13ஆவது திருத்­தத்­துக்கு உட்­பட்ட வகை­யில் வடக்கு ­மா­காண சபை­யின் அனு­ம­தியைப் பெற்று அல்­லது அவர்­க­ளின் ஆலோ­ச­னை­க­ளின் அடிப்­ப­டை­யில் செயற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டும் என்று தெரி­வித்­தார் வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிவ­மோ­கன்.

முல்­லைத்­தீ­வில் திட்­ட­மிட்டு தமி­ழர் நிலங்­களை அப­க­ரிக்­கும் அர­சின் செயற்­பாடு தொடர்­பாக ஆராய்­வ­தற்கு வடக்கு மாகாண அவைத்­த­லை­வர் சி.வி.கே. சிவ­ஞா­னம் தலை­மை­யி­லான அமைச்­சர்­கள் மற்­றும் உறுப்­பி­னர்­கள் அடங்­கிய குழு நேற்று முல்­லைத்­தீ­வுக்­குச் சென்­றது. அத்­து­மீ­றிய நட­வ­டிக்­கை­கள் இடம்­பெ­றும் பகு­தி­க­ளை­யும் அவர்­கள் பார்­வை­யிட்­ட­னர்.

அவர்­க­ளுக்கு ஆத­ர­வாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிவ­மோ­க­னும் சென்­றி­ருந்­தார். அதன்­பின்­னர் ஊட­கங்­க­ளுக்­குக் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்ததா­வது:-

வடக்­கில் கொக்கி­ளாய் உடன் சேர்ந்த பிர­தே­சங்­கள் மண­லாறு என்று எங்­க­ளால் அழைக்­கப்­பட்­டது. பின்­னர் அது வெலி­ஓயா என்ற பெய­ரில் சிங்­கள ஆக்­கி­ர­மிப்பு பிர­தே­ச­மாக அர­சால் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இது முற்­று­மு­ழு­தாக சிங்­கள மக்­களை குடி­யேற்­று­ வ­தற்­காக அமைக்­கப்­பட்ட பிர­தே­ச­மா­கவே உள்­ளது.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் கீழ் இந்த மகா­வலி அபி­வி­ருத்தி அதி­கார சபை உள்­ளது. இந்த அதி­கார சபை­யைப் பயன்­ப­டுத்­தித் தமிழ் மக்­க­ளின் காணி­களை அப­க­ரிக்க முயற்­சி­கள் எடுக்­கப்­ப­டு­கின்­றன. நாம் இதைப் பற்­றிப் பேசி­னால் பரி­சீ­லிக்­க­லாம் என்று கூறு­கின்­றார்­கள். ஆனால் அவர்­க­ளின் நிகழ்ச்சி நிரல் மாற­வில்லை. தற்­போது கல்­யா­ண­புர, ஜன­க­புர எனப் பல புதிய கிரா­மங்­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.

இந்­தக் கிரா­மத்­தில் வாழும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்­கள் கடும் குற்­றங்­கள் புரிந்­த­ வர்­கள். அவர்­களை சிறை­க­ளில் இருந்து கொண்­டு­வந்­து­தான் ஆரம்­பத்­தில் குடி­யேற்­றி­னார்­கள். அரசு ஒரு பிழை­யான நட­வ­டிக்­கை­கயை மேற்­கொண்­டுள்­ளது.

முன்­னர் அரச தலை­வ­ரா­கப் பதவி வகித்த மகிந்த ராஜ­பக்ச தமிழ் மக்­க­ளின் காணி உறு­துி­களை மாற்­றிச் சிங்­கள மக்­க­ளுக்கு உறு­தி­களை வழங்­கி­னார். தமி­ழர்­க­ளின் பூர்­வீக நிலங்­கள் திட்­ட­மிட்டு ஆக்­கி­ர­மிக்­கப்­ப­டு­கின்­றன.

13ஆவது திருத்­தச் சட்­டத்­தை­யும் மீறி மகா­வலி அபி­வி­ருத்தி அதி­கார சபை தமி­ழர்­க­ளின் காணி­களை அப­க­ரிப்­பது ஏற்­க­மு­டி­யாத செயல்.

தமி­ழர்­கள் திரண்டு போராட வேண்­டிய நில­மைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ளோம். தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் காலத்­தில் ஆயு­த­ப­லம் கார­ண­மாக மகா­வலி அபி­வி­ருத்தி அதி­கார சபை­யின் நட­வ­டிக்­கை­கள் தமி­ழர் வாழ்­வி­டங்­க­ளில் நடக்­க­வில்லை. தமி­ழர்­க­ளின் ஆயு­த­ப­லம் ஒடுக்­கப்­பட்ட நிலை­யில் தமிழ் மக்­க­ளின் பிர­தி­நி­தி­க­ளான நாம் ஓர் பல­மற்ற நிலை­யி­லேயே அர­சு­டன் பேச்­சுக்­க­ளில் ஈடு­பட வேண்­டி­யுள்­ளது– என்­றார்.

674 total views