அபிவிருத்தி முயற்சிகளில் இளைய சமுதாயம் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவது அவசியம்

Report
1Shares

கிராமத்தை அபிவிருத்தி செய்யும் முயற்சிகளில் இளைய சமுதாயம் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவது அவசியம் எனறு பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ்; அமுலாக்கப்படும் 'யூத் வித்ரெலன்ட் கிராமத்திற்கு கோடி' என்ற நிகழ்ச்சியின் வெற்றியாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு லெரிமாளிகையில் நேற்று நடைபெற்றது. நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் உற்பத்திகளை அதிகரித்து ஏற்றுமதி வளர்ச்சி காணச் செய்ய வேண்டுமெனவும் கூறினார்.

பொருளாதாரத்தை கட்டியெழுப்புகையில் வேகமாக செல்ல வேண்டிய சந்தர்ப்பங்களில் வேகமாகவும், மெதுவாகச் செல்ல வேண்டிய தருணங்களில் மெதுவாகவும் பயணிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அரசாங்கம் கடன்பளு சுமத்தப்பட்ட நாட்டையே பொறுப்பேற்றது. எனவே முதல் இரண்டு வருடங்களில் பணம் தேட வேண்டிய நிர்ப்;பந்தம் எழுந்தது. எனினும் தற்போது அபிவிருத்திப் பணிகளில் நிதி செலுத்தப்பட்டுவருகிறது பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் கூறினார்.

491 total views