வரையறை இன்றி மூடப்படும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் :அதிரவைக்கும் காரணம்

Report
7Shares

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் இன்று தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என்று பல்கலைக்கழகத்தின் உப பீடாதிபதி பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுள் 27 பேர் கடந்த 3 நாள்களில் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிபுற விடுதிகளில் தங்கியுள்ள 8 மாணவர்களும் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்குத் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

1192 total views