நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்ய கூட்டுறவு மொத்த விற்பனவு நிறுவனம் ஏற்பாடு

Report
1Shares

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்ய தற்போது இருந்தே கூட்டுறவு மொத்த விற்பனவு நிறுவனம் தயாராகி வருகிறது.

இதுதொடர்பாக கூட்டுறவு மொத்த விற்பனவு நிறுவனத்தின் தலைவர் மொஹமட் ரிஸ்வான் ஹமீட் தெரிவிக்கையில் தற்போது நாடு முழுவதும் 400 சதொச விற்பனை நிலையங்கள் இயங்குகின்றன. புத்தாண்டு காலத்திற்கு முன்னர் மேலும் 15 விற்பனை நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய நுகர்வு பொருள்களை தேவையான அளவு களஞ்சியப்படுத்தி வைப்பதற்கும் அவற்றை விற்பனை கிளைகளுக்கு அனுப்பி வைப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

பண்டிகைக் காலத்தில் இடம்பெயர் விற்பனை சேவையும் நடைபெறும். சலுகை விலையில் அத்தியாவசிய நுகர்வு பொருட்களை விநியோகிக்கவும் சதொச தயாராகி வருகிறது. விசேட விலைக் குறைப்பை செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக சதொச தலைவர் மொஹமட் ரிஸ்வான் ஹமீட் மேலும் தெரிவித்துள்ளார்.

823 total views