போர் அனுபவங்களை கொண்ட ஒரு சமூகத்தில் ஒரு மிருகத்தனமாக செயற்பாடு இது

Report
7Shares

இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கண்டி, அம்பாறையில் இடம்பெற்ற வன்முறைகள் மதக் கலவரம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. கிளர்ச்சி மற்றும் போர் அனுபவங்களை கொண்ட ஒரு சமூகத்தில் ஒரு மிருகத்தனமாக செயற்பாடு இது என்று அவர் விமர்சித்துள்ளார்.

கலவரங்கள் தொடர்பில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால் நாளை

ஏனையவர்கள் சட்டத்தைத் தமது கைகளில் எடுக்கத் தயங்கமாட்டார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலவரங்களால் இலங்கை அரசின் மீதான நம்பிக்கையைக் குறையச் செய்துள்ளது. ஐக்கிய நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாமல் இலங்கையால் நம்பிக்கையை

கட்டியெழுப்ப முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1005 total views