முஸ்லிம் வர்த்தகரின், வர்த்தக நிலையத்துக்கு வைக்கப்பட்ட தீயை சிங்கள மக்கள் அணைத்தனர்.

Report
3Shares

ஆனமடுவ நகரில் சிற்றூண்டிச்சாலையொன்றுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் 7 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர் .

தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக புத்தளம் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சம்பிக்க சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

ஆனமடுவயிலுள்ள குறித்த சிற்றூண்டிச்சாலைக்கு நேற்று அதிகாலை 3 மணியளவில் தீ வைக்கப்பட்டது.

முஸ்லிம் நபர் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் தீ வைக்கப்பட்டதுடன் உடனடியாக அப்பகுதி சிங்கள மக்கள் தீயை அணைத்தனர்.

ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தலைமையில் பொலிஸாரும் பொது மக்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நகரிலுள்ள வர்த்தக சங்கத்தின் முயற்சியில் இச்சிற்றூச்சாலை 24 மணித்தியாலத்திற்குள் மீண்டும் திருத்தியமைக்கப்பட்டது.

நேற்றிரவு சர்வமத ஆசிர்வாதத்திற்கு மத்தியில் இச்சிற்றூண்டிச்சாலை மீண்டும் செயல்பட தொடங்கியது.

திறப்ப நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார மதகுருமார் என பலர் கலந்து கொண்டனர்.

மீள் புனர்நிர்மாணம் செய்து 24 மணித்தியாலத்துக்குள் சிங்கள மக்களே வாத்தக நிலையத்தை திறந்தனர் என்பது இனங்களுக்கிடையேயான உறவு இன்னும் நீடிக்கிறது என்பதையே பறை சாற்றுகிறது.

852 total views