100 கைதிகள் ஹம்பாந்தோட்டைக்கு மாற்றம்..!

Report
2Shares

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் 100 பேரை ஹம்பாந்தோட்டை, அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்ற தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள இடம் நெருக்கடியால் 100 கைதிகளை இடமாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதத்திற்குள் இந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

ஹம்பாந்தோட்டை, அங்குனுகொலபெலஸ்ஸ சிறையில்

சிறைக்கைதிகள் 1200 பேருக்கு இடம் காணப்படுவதாகவும் மூடப்பட்டுள்ள தங்காலை சிறையில் இருந்த கைதிகளும் அங்குனுகொலபெலஸ்ஸவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

781 total views