2020 வரை கூட்டரசு ரணிலிடம்

Report
10Shares

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் கூட்டு அரசை 2020ஆம் ஆண்­டு­வரை தொடர்ந்­தும் முன்­னெ ­டுப்­ப­தற்கு ஐக்­கிய தேசி­யக் கட்சி நேற்­றுத் தீர்­மா­னித்­துள்­ளது.

2020ஆம் ஆண்டு வரை­யில் கூட்டு அர­சின் தலைமை அமைச்­ச­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே செயற்­ப­டு­வார் என்­றும் கூட்­டத்­தில் முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

கூட்­ட­ர­சின் பிர­தான பங்­கா­ளிக்­கட்­சி­யான ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் இந்த முடிவு ஏனைய பங்­கா­ளிக்­கட்­சி­க­ளுக்­கும் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளது.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­ வுக்­கும், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் மூத்த அமைச்­சர்­க­ளுக்­கு­மி­டை­யி­லான சிறப்­புச் சந்­திப்­பொன்று அல­ரி­மா­ளி­கை­யில் நேற்று நடை­பெற்­றது. அதி­லேயே மேற்­படி முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல்­மூ­லம் அர­சுக்கு மக்­கள் வழங்­கி­யுள்ள எச்­ச­ரிக்­கையை கருத்­திற்­கொண்டு, அடுத்­து­வ­ரும் நாள்­க­ளில் அதி­ரடி தீர்­மா­னங்­க­ளை­யும், நட­வ­டிக்­கை­க­ளை­யும் முன்­னெ­டுப்­ப­தற்­கும் இந்­தக் கூட்­டத்­தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

வாழ்க்­கைச்­சுமை அதி­க­ரிப்பு, வேலை­யின்மை பிரச்­சினை, ஊழல், மோச­டிக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டிய நட­வ­டிக்­கை­கள் சம்­பந்­த­மா­க­வும் இதன்­போது விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளது.

895 total views