தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலைமை மாறி­னால் இணைவு

Report
7Shares

ஒற்­றை­யாட்­சியை வலி­யு­றுத்­தும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலைமை மாறி­னால் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­டன் இணைந்து பய­ணிப்­ப­தற்குத் தயா­ராக இருக்­கின்­றோம் என்று தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் தெரி­வித்­தார்.

தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் அலு­வ­ல­கத்­தில் நேற்று மாலை நடத்­தப்­பட்ட செய்­தி­யா­ளர் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்­த­தா­வது-,

தமிழ் மக்­கள் தமிழ் தேசி­யத்­தின் பக்­கமே நிற்­கின்­ற­னர். தமிழ் மக்­க­ளுக்கு இழைக்­கப்­ப­டும் அர­சி­யல் மோச­டி­க­ளை­யும், நம்­பிக்­கைத் துரோ­கத்­தை­யும் எடுத்­துக் கூறி­னோம். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் மீதான விமர்­ச­னங்­கள் அனைத்­தும் கொள்கை ரீதி­யா­ன­வையே. அந்த விமர்­ச­னங்­கள் சில வேளை­க­ளில் கடு­மை­யாக இருந்­தி­ருக்­க­லாம்.

ஒற்­றை­யாட்­சிக்கு இணங்கி பௌத்­தத்­துக்கு முன்­னு­ரிமை வழங்க இணங்­கி­ய­மை­யா­லேயே அவ்­வாறு விமர்­ச­னங்­கள் அமைந்­தன.தமிழ்த் தேசி­யப் பேரவை மாற்­றத்­துக்கு பெரும் அடித்­த­ள­மாக அமைந்­தது. இனத்­துக்­குத் துரோ­கம் இழைத்து வரு­கின்­ற­னர் என்­பதே எமது குற்­றச்­சாட்டு. அதற்கு எதி­ரா­கவே பேசி­னோம். நாம் ஒட்­டு­மொத்த தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­ன­வர்­கள் அல்ல.

தமி­ழி­னம் நடுத் தெரு­வில் நிற்­ப­தற்­குத் தலை­மைத்­து­வம் வழங்­கி­ய­வர்­கள் நீக்­கப்­பட்டு நல்­ல­தொரு தலை­மைத்­து­வம் இருந்­தால், ஊழல் இல்­லாத மோசடி இல்­லாத வகை­யில் உள்­ளூ­ராட்சி சபையை நடத்த நல்­ல­தொரு தலை­மைத்­து­வம் அமைந்­தால் ஒரு­மித்து செல்­வோம்.

கூட்­ட­மைப்­பில் தெரிவு செய்­யப்­பட்ட உறுப்­பி­னர்­க­ளில் தேசி­யத்­து­டன் ஊழ­லற்று இயங்க விரும்­பு­வோர் எம்­மு­டன் இணைந்து தமிழ் தேசி­யத்தை முன்­னெ­டுத்­துச் செல்­ல­லாம். அவர்­களை இணைக்க நாம் என்­றும் தயா­ரா­கவே உள்­ளோம்.

தமிழ்த் தேசி­யத்­தைக் காப்­பாற்ற, பாதிக்­கப்­பட்ட தாயக நிலப்­ப­ரப்பை கட்­டி­யெ­ழுப்ப உள்­ளூ­ராட்சி தேர்­த­லில் வெற்­றி­யீட்­டிய உறுப்­பி­னர்­கள் முன் வர­வேண்­டும். இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் எம்மை மிக கேவ­ல­மாக விமர்­சித்­த­வர்­கள் வாய் மூடி நிற்­கும் வகை­யில் நாம் உழைத்­துள்­ளோம்.

தமிழ் மக்­கள் கோரிய எத­னை­யும் நல்­லாட்சி என்று சொல்­லப்­ப­டும் இந்த ஆட்சி செய்­ய­வில்லை. தமிழ் மக்­கள் கோரி­யதை செய்­தால் மகிந்த குழப்­பு­வார், தெற்கு குழப்­ப­ம­டை­யும் என்று கூறி­னார்­கள். நாம் மகிந்­தவை பன்­னாட்­டுச் சமூ­கம் முன்­பாக போர்க் குற்­ற­வா­ளி­யாக்­கப் போரா­டி­ய­போது மகிந்­தவை காப்­பற்­றும் முயற்­சி­யில் கூட்­ட­மைப்­பி­னர் ஈடு­பட்­ட­னர்.

தற்­போது நடை­பெற்று முடிந்­துள்ள உள்­ளூ­ராட்சி தேர்­த­லில் தெற்­கில் மகிந்த வெற்­றி­யைப் பெற்­றுள்­ளார். அன்று மகிந்­தவை காப்­பற்­றி­ய­வர்­கள், இன்று மகிந்த வென்­ற­வு­டன் தமிழ்த் தேசி­யக் கட்­சி­கள் ஒன்­றி­ணைய வேண்­டும் என்று கோரு­கின்­ற­னர் – என்­றார்.

750 total views