ஊர்வலம், கூட்டம் இன்றும் தடை செய்யப்பட்டுள்ளது

Report
1Shares

உள்ளுராட்சி சபைத் தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையிலான எந்தவொரு ஊர்வலமும், ஆர்ப்பாட்டமும் இன்றும் (12) இடம்பெறுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இன்றைய தினம் பொலிஸ் குழுவினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கட்சியின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஊர்வலம் நடாத்துதல், கூட்டம் கூடுதல் என்பன மூன்று தினங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேனர குறிப்பிட்டுள்ளார்.

568 total views