பினுவின் கூட்டாளிகள் உட்பட 4 பேர் கைது: போலீசார் அதிரடி!

Report
5Shares

சென்னையில் பினுவின் கூட்டாளிகள் உட்பட 4 பேரை கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பூந்தமல்லி அருகே மலையம்பாக்கம் பகுதியில், நள்ளிரவில் பிரபல ரவுடி பினுவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட 100-க்கும் மேற்பட்ட ரவுடிகளில் 75 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளிகளாக இருந்த பினு, கனகு, விக்கி ஆகிய மூன்று பேரும் தப்பி ஓடி விட்டனர். இதனையடுத்து தப்பி ஓடிய அனைத்து ரவுடிகளையும் பிடிக்க போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று, பினுவின் கூட்டாளி முகேஷை தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து அவரிடம், பினு குறித்து மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், சூளைமேடு வினோத், அருகம்பாக்கம் அலாவுதீன், குட்டியப்பன், அப்பன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில், அலாவுதீன், குட்டியப்பன், அப்பன்ராஜ் ஆகிய மூன்று பேரும் ராதாகிருஷ்ணன் கூட்டாளிகள் என தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் மூவர் மீதும் கொலை உள்ளிட்ட 21 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

587 total views