ஈரான் - இலங்கை கூட்டு ஒத்துழைப்பை விரிவுபடுத்த நடவடிக்கை

Report
1Shares

ஈரான் மற்றும் இலங்கைக்கு இடையில் பல்வேறு துறைகளில் அதாவது வர்த்தக மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தூதுக்குழு இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.

ஈரானின் எரிசக்திதுறையின் உயர்அதிகாரி ரசோல் தலைமையிலான குழுவினர் இலங்கை அதிகாரிகளுடன் இத்துறைகள் தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தி பின்னர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் போது இதற்கான திட்டங்களை துரிதமாக விரிவுபடுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.

இலங்கைக்கும் ஈரானக்கும் இடையில் சுகாதாரம் மற்றும் கலாச்சார துறைகளை பரிமாறிக்கொள்வது தொடர்பிலும் உடன்படிக்கை குறித்து இதன்போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பிரதி வர்த்தக தொழிற்துறை அமைச்சர் மற்றும் ஏற்றுமதி துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

434 total views