சிவனொளிபாத யாத்திரை செல்லும் பக்தர்களின் நலன் கருதி விசேட ரயில் சேவை

Report
3Shares

சிவனொளிபாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் நலன் கருதி கொழும்பு கோட்டைக்கும் ஹட்டனுக்கும் இடையில் கடுகதி ரயில் சேவையொன்று ஈடுப்படுத்தப்பட்டு இருப்பதாக ரயில் திணைக்களத்தின் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.

இந்த ரயில் இரவு 7.30க்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்பட்டு அதிகாலை 12.45க்கு ஹட்டன் ரயில் நிலையத்தை சென்றடையும். பின்னர் குறித்த ரயில் காலை 8.30 க்கு புறப்பட்டு பிற்பகல் 2.30 க்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.

ஆசனங்களை ஓதுக்கக்கூடிய வசதிகளை கொண்ட இந்த ரயில் ராகம கம்பஹா வெயாங்கொட விரிகம பொல்காவெலை ரம்புக்கனை ஹிஹலகோட்டே கடுகன்னாவ பெராதனியா கம்பளை நாவலப்பிட்டிய வட்டவளை ஆகிய ரயில் நிலையங்களில் மாத்திரம் நிறுத்தப்படும்.

மே மாதம் 1 ஆம் திகதி வரையில் இந்த ரயில் சேவை நடைபெறும். வாரத்தில் நடுப்பகுதியில் மாத்திரம் சில தினம் தவிர ஏனைய நாட்களில் ரயில் சேவை இடம் பெறும்.

460 total views