மக்கள் வாக்களித்த வீதம் மிக குறைவு

Report
1Shares

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மொத்த வாக்குப்பதிவு 69 இற்கும் அதிகமான வீதமாக அமைந்திருந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று காலை ஆரம்பித்த வாக்குப்பதிவுகள் மாலை 4 மணியளவில் முடிவடைந்தது. இதேவேளை மாத்தளை மாவட்டத்திலே அதிகப்படியான வாக்குகள் பதிவாகியுள்ளது. அங்கு 80 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் களுத்துறை, அநுராதபுரம், மொனறாகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அதிக 75வீத வாக்களிப்புகள் இடம்பெற்றுள்ளன.

பெரும்பான்மையான பகுதிகளில் எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாததோடு அமைதியான முறையில் தேர்தல் இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வாக்கெண்ணும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

432 total views