கிராம-நகர வாசிகளுக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொள்ள சிறந்ததொரு வாய்ப்பு!

Report
2Shares

உள்ளூராட்சி சபை தேர்தல் கிராம-நகர வாசிகளுக்கு அபிவிருத்திக்களை பெற்றுக்கொள்வதற்கு சிறந்ததொரு வாய்ப்பு என சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

மாத்தறை மாவட்டத்தில் உள்ள மொறவக்க மத்திய மகா வித்தியாலயத்தில் அவர் தனது வாக்கினை பதிவுசெய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “இந்த தேர்தல் கிராம மற்றும் நகர வாசிகளுக்கு முக்கியமானதொரு தேர்தல். இவ்விரண்டுக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளை செய்துக் கொள்ளக்கூடிய சிறந்த சந்தர்ப்பமாகும்.

தன்னிக்கட்சியாக தேர்தலில் நின்று வெற்றிபெற்று நாட்டின் பொருளாதாரத்தினை இந்த சகத்தியை கிராம மற்றும் நகரங்களுக்கு வழங்குவோம்’ என கூறினார்.

387 total views