யாழில் வாக்களிப்பில் ஈடுபட்ட முக்கியஸ்தர்கள்!!

Report
16Shares

நடைபெற்றுவரும் 2018ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்ற நிலையில், யாழில் அரசியல் தலைமைகள் பலரும் தங்கள் வாக்குகளை ஆர்வத்துடன் பதிவுசெய்துள்ளனர்.

அந்தவகையில், வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறையில் தனது வாக்கினை பதிவுசெய்தார்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் கட்டபிறாய் கலைமணி சனசமூக நிலையத்தில் வாக்களித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ். புனித ஜேம்ஸ் கல்லூரியிலும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா யாழ். நாவலர் கலாசார மண்டபத்திலும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

708 total views