மட்டகளப்பில் வேட்பாளரின் வாகனம் மர்ம் கும்பலால் எரிப்பு!!

Report
3Shares

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வாகனம் இன்று (சனிக்கிழமை) அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை வடக்கு வட்டாரத்தில் விகிதாசார முறையில் போட்டியிடும் குணராசா ஜெகதீஸ்வரன் என்பரின் வாகனமே இவ்வாறு தீக்கிராயாக்கப்பட்டுள்ளது.

களுதாவளை வன்னியார் வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டின் முன்னாலுள்ள வீதியருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.குணவர்தன உள்ளிட்ட குழுவினர் நிலமையினை நேரில் பார்வையிட்டதுடன் மேலதிக விசாணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

371 total views