கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் வாக்களிப்பு!

Report
2Shares

தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் வாக்களித்துள்ளனர்.

மாவை சேனாதிராஜா, யாழ். கொல்லங்கட்டி சைவத்தமிழ் வித்தியாசாலையிலும், சுமந்திரன் குடத்தன்னை அமெரிக்க மிஷன் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியிலும் குடும்பத்தாருடன் சென்று வாக்களிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், வடக்கு- கிழக்கில் மக்கள் ஆர்வமாக வாக்களிப்பில் ஈடுபடுவார்கள் என்றும் அதன் மூலம் அனைத்து இடங்களிலும் தமக்கு வெற்றி கிட்டும் என்றும் மாவை சேனாதிராஜா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, யாழ். மக்களும் ஆர்வமாக வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

333 total views