110 உறுப்பினர்களுக்கு 1356 அபேட்சகர்கள் போட்டி

Report
5Shares

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மா நகர சபைக்கு இம்முறை பெரும் போட்டி நிலவுகின்ற நிலையில், இத்தேர்தலில் நியமனப் பத்திரம் மூலமாக 992 அபேட்சகர்களும், விகிதாசார முறைமை மூலமாக 564 அபேட்சகர்களுமாக மொத்தம் 110 உறுப்பினர்கள் தெரிவிற்காக 1356 அபேட்சகர்கள் இம்முறை களத்தில் குதித்துள்ளனர்.

புதிய தேர்தல் முறைமையின் பிரகாரம், கொழும்பு மா நகர சபை எல்லைக்குட்பட்ட 47 வட்டாரங்கள் மூலம் 66 உறுப்பினர்களும், விகிதாசாரம் மூலம் 44 உறுப்பினர்களுமாக மொத்தம் 110 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதில் 28 பெண் உறுப்பினர்களும் அடங்குவர்.

கொழும்பு மா நகர சபைக்கு இம்முறை, ஐ.தே.க. மற்றும் ஐ.ம.சு.மு. ஆகிய இரு பிரதான அரசியல் கட்சிகள் உள்ளிட்ட 10 அரசியல் கட்சிகளும், 2 சுயேட்சைக் குழுக்களுமாக மொத்தம் 12 அணிகள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

323 total views