4 தங்க பிஸ்கெட் கடத்திய பெண் கைது

Report
3Shares

24 இலட்சம் ரூபா பெறுமதியான 4 தங்க பிஸ்கெட்டுக்களை சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு கொண்டு செல்ல முயற்சித்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி, பேராதெனிய பகுதியை சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் மூலம் கொண்டுவரப்பட்ட 100 கிராம் பாரமுடைய 4 தங்க பிஸ்கெட்டுக்கள் காணப்பட்டதாகவும் குறித்த தங்க பிஸ்கட்டுக்களை சுங்கப்பிரிவினர் கைப்பற்றியுள்ளதாகவும் சுங்கப்பிரிவின் பதில் ஊடகப் பேச்சாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார்.

275 total views