சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் கைது

Report
2Shares

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் அவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய ட்ரோலர் இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் ட்ரோலர் இயந்திரம் ஆகியன தலைமன்னார் இலங்கை கடற்படையின் தம்மன்னா நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மீனவர்கள் மன்னார் நீர் வளங்கள் மற்றும் கடற்தொழில் அலுவலக உதவி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

196 total views