சிவராம் படுகொலைக்கு இவர்கள்தான் காரணம்; கோவிந்தன் கருணாகரம் குற்றச்சாட்டு!

Report
6Shares

முன்னாள் பிரதியமைச்சரான கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரனே சிரேஷ்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராம் படுகொலைக்கு பிரதான வகிபாகங்களை மேற்கொண்டவர் என்ற குற்றச்சாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் முன்வைத்துள்ளார்.

உள்ளுராட்சிமன்ற தேர்தல் நாளை மறுதினம் சனிக்கிழமை 10ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், மட்டக்களப்பு களுதாவளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதி பிரசாரக் கூட்டம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், தமிழ் மக்கள் தங்களுடைய சொத்துக்கள், கலை, கலாசாரம் என அனைத்தையும் இழந்தமைக்கு நாட்டின் பிராதான கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசிய கட்சியே காரணம் எனவும் சாடினார். மேலும் 30 வருட ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதிலிருந்து தற்போது வரை தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே எனவும் அவர் கூறினார்.

இக்கூட்டத்திலே முன்னாள் பிரதியமைச்சரான கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரனே சிரேஷ்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராம் படுகொலைக்கு பிரதான வகிபாகங்களை மேற்கொண்டவர் என்ற குற்றச்சாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் முன்வைத்துள்ளார்.

222 total views