பொல்கஹவெல மேம்பாலம் இம்மாதம் 17 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறப்பு

Report
5Shares

பொல்கஹவெல மேம்பாலம் இம்மாதம் 17 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்பட உள்ளது.

ரெயில் போக்குவரத்துக் காரணமாக நாளாந்தம் 4 மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட காலம் பொல்கஹவெல வீதி மூடப்படுவதனால், வாகன நெரிசல் ஏற்படுவதன் காரணமாக இந்த மேம்பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மே;மபாலத்தின் நீளம் 353 மீற்றர்களாகும்.

இதன் நிர்மாணப்பணிக்கு 200 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட தொகை செலவிடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

550 total views