அநுராதபுரத்திலும் கவனம் செலுத்துக, மஸ்தானுக்கு ஜனாதிபதி வேண்டுகோள்!!

Report
3Shares

மதவாச்சி பிரதேச சபையின் மஹாசியம்பலாகஸ்கட வட்டார வேட்பாளர் ஏ.ஏ.ஜெஸ்பீல் அவர்களை ஆதரித்து மேற்படி வட்டாரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் காதர் மஸ்தான் அவர்களின் பங்களிப்புடனும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயலாளரும் விவசாய அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க அவர்களின் பங்குபற்றுதலுடனும் இன்று இடம்பெற்றது.

வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவராக இருக்கும் மஸ்தான் எம் பி. அவர்கள் ஒரு துடிப்பான அரசியல்வாதியாக இருப்பதால் அநுராதபுர பகுதி தேர்தல் நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளையடுத்து இன்று அவர் மேற்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.​

454 total views