ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் தாதியர் தொழிற்சங்க நடவடிக்கை முடிவு

Report
1Shares

ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் தாதியர் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் தலைவருக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் சுசித்த சேனாரட்ன தெரிவித்தார்.

கைவிரல் அடையாளத்தை பதிவு செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. கைவிரல் அடையாளத்தை பதிவு செய்யும் நடவடிக்கை கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

வைத்தியசாலைகளை கணனி மயப்படுத்தும் திட்டத்தின் கீழ் கைவிரல் அடையாளத்தை பதிவு செய்யும் நடவடிக்கை ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதையடுத்து தொழிற் சங்க நடவடிக்கை மேற்கொள்ளளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

340 total views