விஸ்தரிக்கப்படவுள்ள டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Report
2Shares

இந்த வருடம் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் மேலும் விஸ்தரிக்கப்படும் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது.

மேல் மாகாணத்திலும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்திலும் எதிர்வரும் 17ம் திகதி தொடக்கம் 19ம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பாடசாலை மட்டத்திலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மக்களின் ஒத்துழைப்பு இருப்பின் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை சிரமமின்றி மேற்கொள்ளமுடியும் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் நிபுணர் டொக்டர் பிரஷிலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடம் இதுவரை ஆயிரத்து 350 டெங்கு நோயாளர்கள் இனக்காணப்பட்டிருந்தாலும் இதுவரை மரணங்கள் பதிவாகவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

374 total views