பாகிஸ்தான் வர்த்தகக் கண்காட்சி இன்று ஆரம்பம்

Report
1Shares

பாகிஸ்தான் வர்த்தகக் கண்காட்சி இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டப்பத்தில் இன்று ஆரம்பமாகவுள்ள இந்த கண்காட்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

பாகிஸ்தானிலுள்ள தயாரிப்புக்களையும் சேவைகளையும் இலங்கை மக்களுக்கு காட்சிப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

பொறியியல் மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் ,ஆடைத்தொழிற்துறை , உடுதுணி கைப்பணி அலங்கார பொருட்கள் ,மருந்து வகைகள் , உணவு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறுபட்ட பொருட்களை இந்த கண்காட்சியில் பொது மக்கள் பார்வையிட முடியும்.

238 total views