முதலாம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான தேசிய வைபவம் ஜனவரி 15

Report
1Shares

இந்த வருடம் முதலாம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான தேசிய வைபவம் எதிர்வரும் திங்கட்கிழமை (15) இடம்பெறவுள்ளது.

கொழும்பு இசிபத்தன கல்லூரியில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வுடன் இணைந்ததாக அரச பாடசாலைகளிலும், அரச உதவி பெறுகின்ற மற்றும் பெறாத தனியார் பாடசாலைகளிலும் முதலாம் தரத்தை மாணவர்களை அனுமதிக்கும் நடைமுறை திங்கட்கிழமை நடைபெறும்.

இதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சகல மாகாண கல்விச் செயலாளர்களுக்கும், மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

242 total views