இலஞ்­சம் பெற முயன்ற சம்­ப­வம் இரு­வர் பிணை­யில் விடு­தலை

Report
1Shares

நார­ஹேன்­பிட்டி பகு­தி­யில், மருத்­து­வர் ஒரு­வ­ரி­டம் இலஞ்­சம் பெற முயன்ற சம்­ப­வம் தொடர்­பில் கைது செய்­யப்­பட்­டி­ருந்த முன்­னாள் பொலிஸ் அதி­கா­ரி­கள் இரு­வர் பிணை­யில் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

கொழும்பு மேல் நீதி­மன்­றி­னால் அவர்­கள் நேற்­றுப் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­ட­னர். 80 லட்­சம் ரூபா பணம் பெற முயன்ற குற்­றச் சாட்­டில் நார­ஹேன்­பி­டிய முன்­னாள் பொலிஸ் பொறுப்­ப­தி­காரி மற்­றும் முன்­னாள் பொலிஸ் பரி­சோ­த­க­ருமே பிணை­யில் விடு­தலை செய்­யப்­பட்­ட­னர்.

2015 ஆம் ஆண்டு குறித்த மருத்­து­வ­ரி­டம் அவர்­கள் 80 லட்­சம் ரூபா பணத்தை இலஞ்­ச­மாகக் கோரி அவற்­றில், 25 லட்­சம் ரூபா பணத்­தைப் பெற்­றுக் கொண்­ட­னர் என்று இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு நீதி­மன்­றுக்­குத் தக­வல் தெரி­வித்­துள்­ளது என்று மேலும்­தெ­ரி­விக்­கப்­பட்­டது.

40 total views