ஹெரோ­யின் வைத்திருந்தவருக்கு 15 மாதங்கள் விளக்கமறியல்

Report
1Shares

836 மில்­லிக் கிராம் ஹெரோ­யினை விற்பனை செய்யும் நோக்கில் உடை­மை­யில் வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டில் சுமார் 15 மாதங்­கள் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டி­ருந்த சந்­தே­க­ந­பரை யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றம் நேற்று பிணை­யில் விடு­வித்­தது.

மல்­லா­கம் நீதி­வான் மன்ற எல்­லைக்­குட்­பட்ட சுன்­னா­கத்­தில் போதைப் பொரு­ளான ஹெரோ­யினை விற்­பனை செய்த குற்­றச்­சாட்­டில் குடும்­பத்­த­லை­வரான செல்­வ­நா­ய­கம் சத்­தி­ய­சா­யி­பாபா கைது செய்­யப்­பட்­டார்.

அவர் கடந்த ஆண்டு ஒக்­ரோபர் 8ஆம் திகதி தொடக்­கம் மல்­லா­கம் நீதி­வான் மன்­றால் தொடர்ச்­சி­யாக விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டி­ருந்­தார்.

சந்­தே­க­ந­பர் சார்­பில் அவ­ரது மனைவி யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றில் பிணை விண்­ணப்­பம் செய்­தார். அதன் மீதான விசா­ர­ணை­கள் இடம்­பெற்று வந்­தன. பிணை விண்­ணப்­பம் யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­ச­கர் இளஞ்­செ­ழி­யன் முன்­னி­லை­ யில் நேற்று விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டது.

901 total views