இந்­திய மீன­வர்­க­ளின் விளக்­க­ம­றி­யல் நீடிப்பு!!

Report
1Shares

இலங்கை கடற்­ப­ரப்­புக்­குள் அத்­து­மீறி மீன்­பி­டி­யில் ஈடு­பட்டு கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டி­ருந்த இந்­திய மீன­வர்­க­ளின் விளக்­க­ம­றி­யல் எதிர்­வ­ரும் 23ஆம் திக­தி­வரை நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

குறித்த மீன­வர்­கள் இலங்கை கடற்­ப­ரப்­பில் அத்­து­மீறி மீன்­பி­டி­யில் ஈடு­பட்­ட­னர் என்ற குற்­றச்­சாட்­டில் நெடுந்­தீவு, கச்­ச­தீவு போன்ற கடல்­ப­கு­தி­க­ளில் வைத்து இலங்கை கடற்­ப­டை­யி­ன­ரால் கடந்த வருட இறு­திப் பகு­தி­க­ளில் கைது செய்­யப்­பட்­டி­ருந்­த­னர்.

அவர்­கள் மாவட்ட நீரி­யல்­வ­ளத் திணைக்­க­ளத்­தி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டி­ருந்­த­னர்.

அவர்­க­ளின் வழக்கு விசா­ரணை நேற்­றை­ய­தி­னம் ஊர்­கா­வற்­துறை நீதி­மன்­றில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. இதன்­போதே ஆஜர்ப்­ப­டுத்­தப்­பட்ட 54 இந்­திய மீன­வர்­க­ளை­யும் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு ஊர்­கா­வற்­துறை நீதி­வான் எம்.ரியால் உத்­த­ர­விட்­டார்.

893 total views