கொக்காவிலில் கோர விபத்து – நால்வர் சம்பவ இடத்தில் சாவு!!

Report
2Shares

வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தியுடன் ஹையேஸ் வாகனம் மோதியது. ஹையேஸ் வாகனத்தில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்தக் கோர விபத்து கிளிநொச்சி, கொக்காவில் சந்திக்கு அருகில் இன்று இரவு நடந்துள்ளது. விபத்தில் சிக்கியவர்கள் யாழ்ப்பாணம், நெல்லியடியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது.

பழுதடைந்து வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தியில் ஹையேஸ் வாகனம் மோதியுள்ளது. ஹையேஸ் வாகனம் முற்றாகச் சிதைந்தது.

873 total views