சந்தையில் பெரும்போக அறுவடை நெல்

Report
1Shares

இம்முறை பெரும்போக நெல் அறுவடை சந்தைக்கு வர ஆரமபித்திருப்பதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் நெல் அறுவடை தற்போது ஆரம்மிக்ப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு நெல்லுக்கான உறுதி செய்யப்பட்ட விலை கிடைக்காத பட்ச்சத்தில் அவர்களின் நெல்லை கொள்வனவு செய்ய சபை தயாராவுள்ளது.

கடந்த காலத்தில் சந்தையில் அரிசியின் விலை அதிகரித்தமையினால், பெரும்போகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தும்; சபையின் மத்தியஸ்தம் வகிப்பதன் அவசியத்தை விவசாயிகளும், நுகர்வோரும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

நெல் சந்தைப்படுத்தும் சபையிடம்; நெல் கையிருப்பிலிருக்கும் பட்சத்தில் சந்தையில் அரிசியின் விலை அதிகரிப்பை தடுப்பதற்காக நெல் சபையினால் சந்தைக்கு அரிசியை விநியோகிக்க முடியும் என்றும் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் தனியார் துறையினரால் குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் நெல்லை கொள்வனவு செய்ய முடியாது அத்தோடு நுகர்வோரான பொது மக்களுக்கு அரிசியை குறைந்த விலையில் பெற்று கொள்ள முடியும்.

கடந்த பெரும் போகத்தில் 6 இலட்சம் ஹெக்டர் நிலப்பரப்பில் நெல் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

இருப்பினும் நிலவிய வறட்சி காரணமாக நவம்பர் மாதம் அளவில் 4 இலட்;;;;சத்து 50ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பிலேயே நெல்லை உற்பத்தி செய்ய முடிந்தது என்று சபைத் தெரிவித்தார்.

Read 32 times

837 total views