நீண்­ட­கா­லம் சீர­மைக்­கப்­ப­டாத மின்­னங்­கட்­டுப்­பா­லம்!

Report
1Shares

மன்­னார் மாந்தை பிர­தேச செய­லர் பிரி­வுக்­குட்­பட்ட கள்­ளி­ய­டிக் கிரா­மத்­துக்­குச் செல்­லு­கின்ற மின்­னங்­கட்­டுப்­பா­லம் நீண்­ட­கா­ல­மாக சீர­மைக்­கப்­ப­டாது இருப்­ப­தாக மக்­கள் கவலை தெரி­விக்­கின்­ற­னர்.

குறித்த பாலம் சீர­மைக்­கப்­ப­டாது காணப்­ப­டு­வ­தால் அத­னூ­டா­கப் பய­ணிக்­கும்­போது சிர­மத்­துக்­குள்ளாகும் நிலை­யில், தற்­போது மழை­நீ­ரும் தேங்கி நிற்­ப­தால் மிகுந்த சிர­மத்தை எதிர்­கொள்­கின்­றோம் என அவர்­கள் மேலும் தெரி­வித்­த­னர்.

மண்­டக்­கல்­லாறு, அரு­வி­யா­றுப் பாலங்­கள் தொடர்ச்­சி­யாக சீர­மைக்­கப்­பட்டு வரும் நிலை­யில் மின்­னங்­கட்­டுப்­பா­லத்தின் கட்­டு­மா­னப்­ப­ணி­கள் இது­வரை இடம்­பெ­ற­வில்லை என­வும் அவர்­கள் கவலை தெரி­விக்­கின்­ற­னர்.

எனவே மக்­க­ளு­டைய போக்­கு­வ­ரத்தை இல­கு­ப­டு­த்­தும் வகை­யில் இந்­தப் பாலத்தை விரைவாகச் சீர­மைத்­துத் தரு­மாறு மக்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

459 total views