இன்டெக்ஸ் ஆடைவடிவமைப்பு கண்காட்சி இன்று ஆரம்பம்

Report
1Shares

இன்டெக்ஸ் (INTEX)ஆடை வடிவமைப்பு கண்காட்சி இன்று கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு டி.ஆர்.விஜயவர்த்தன மாவத்தையில் அமைந்துள்ள கண்காட்சிகள் மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை இடம்பெறவுள்ளது.

இக் கண்காட்சி மூன்று நாட்களைக்கொண்டதாக எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

நவீன ஆடை வடிவமைப்புத்துறையில் இளைஞர், யுவதிகளுக்கு காணப்படும் வாய்ப்புக்கள் பற்றிய விரிவான தகவல்களை இந்த கண்காட்சி மூலம் பெற்றுக் கொள்ளக்கூடியதாக அமையும்.

832 total views