நடுவீதியில் மாணவரின் ஆடையைக் களைந்த பொலிஸ் அதிகாரி

Report
7Shares

நடுவீதியில் மாணவர் ஒருவரின் ஆடையைக் களைந்த பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் எனத் தெரியவருகிறது.

சிலாபத்தில் கடந்த சனிக்கிழமை தேடுதல் நடவடிக்கை ஒன்று நடத்தப்பட்டது. அதன்போது, சாரம் அணிந்த பதினாறு வயது மாணவர் ஒருவரின் சாரத்தை பொலிஸ் அதிகாரியொருவர் பிடித்திழுத்திருக்கிறார்.

இதனால் அந்த மாணவர் பொதுமக்கள் முன்னிலையில் அவமானப்பட நேர்ந்திருக்கிறது.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் அந்த மாணவர், கடந்த மூன்று தினங்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதாகவும், சாதாரண தரப் பரீட்சை எழுதப் போவதில்லை என்றும் பிடிவாதமாக இருப்பதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க தாம் தயார் என்றும், எனினும் இதுவரை யாரும் இது குறித்து முறைப்பாடு எதையும் செய்யவில்லை என்றும் சிலாபம் பொலிஸ் நிலைய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

922 total views